Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமானப்படை தளபதியின் உடல் அரச மரியாதையுடன் தகனம்

In இந்தியா
Updated: 05:42 GMT, Sep 18, 2017 | Published: 05:39 GMT, Sep 18, 2017 |
0 Comments
1166
This post was written by : Kemasiya

முன்னாள் விமானப்படை தளபதி அர்ஜன் சிங்கின் இறுதிக்கிரியைகள் அவரது வீட்டில் இடம்பெற்றதை தொடர்ந்து அவரின் உடல் ‘பிரார் சதுக்கத்தில்’  அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இராணுவத்தளபதியின் உடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவரின் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை இராணுவத் தளபதியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நேற்றைய தினம் ஜனாதிபதி ராம் நாத் கோவிந் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் சென்று  விமானப்படை தளபதி அர்ஜன் சிங்கின் உடலுக்கு மரியாதை செலுத்தியதுடன் உறவினர்களுக்கு ஆறுதலும் தெரிவித்திருந்தனர்.

அதே போல் இன்று காலை பாதுகாப்பு  அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முப்படைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு அர்ஜன் சிங்கின் உடலுகுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg