Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானில் தாலிம் புயல்: 17 பேர் காயம்

In உலகம்
Updated: 05:35 GMT, Sep 18, 2017 | Published: 05:35 GMT, Sep 18, 2017 |
0 Comments
1131
This post was written by : Suganthini

தெற்கு ஜப்பானில் தாலிம் புயல் தாக்கியுள்ளதைத் தொடர்ந்து 17 பேர் காயமடைந்துள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளனர்.

தெற்கு ஜப்பானில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் அடை மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், பசுபிக் பெருங்கடலில் உருவான தாலிம் புயல், க்யூஷு பகுதியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தாக்கியுள்ளது என, ஜப்பான் வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், சுமார் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ரயில் மற்றும் விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 800 விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என, விமான நிலைய அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இவ்வாறிருக்க, பலத்த காற்றுடன் பெய்துவரும் அடை மழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஆகவே, பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் தவிர்த்துக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg