Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வலுக்கிறது எதிர்ப்பு: சமாளிக்குமா இலங்கை?

In இலங்கை
Published: 05:57 GMT, Sep 18, 2017 |
0 Comments
1475
This post was written by : Varshini

ஐ.நா. மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் வார நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கோரி ஜெனீவாவில் மாபெரும் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முன்றலில் ‘நீதிக்கான போராட்டம்’ என்ற தலைப்பில் இவ் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்துவதற்கு தமிழ் அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் பெருமளவான தமிழர்கள் சென்று கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை மந்தகதியில் நகரும் நிலையில், நீதிக்கான பொறிமுறையை இலங்கை அரசாங்கம் எவ்வித கால தாமதமும் இன்றி நடைமுறைப்படுத்த ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரியே, இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இடம்பெறும் உப குழுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காகவும் இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கிலும் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோவும் ஜெனீவா சென்றுள்ளார்.

நேற்று ஜெனீவாவைச் சென்றடைந்த வைகோவை ஈழத் தமிழ் அமைப்பின் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர். இன்றைய போராட்டத்திலும் அவர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் வைகோ, பல தடவைகள் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு விண்ணப்பித்திருந்த போதிலும் அவருக்கான விசா அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. அந்தவகையில், 16 வருடங்களுக்குப் பின்னர் வைகோ ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg