Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க-அவுஸ்ரேலிய விமானப்படையுடன் இணைந்து இலங்கை விமானப்படை பயிற்சி

In இலங்கை
Updated: 06:32 GMT, Sep 18, 2017 | Published: 06:32 GMT, Sep 18, 2017 |
0 Comments
1216
This post was written by : Anojkiyan

இருவருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படும் பசுபிக் ஆகாயவழி தரையிறக்க அணிவகுப்பானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெற்ற மனிதாபிமான நடவடிக்கை மற்றும் அனர்த்த உதவிக்கான ஆகாயவழி தரையிறக்க அணிவகுப்பு அமெரிக்கா மற்றும் இலங்கை இணை ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

இதில் நடவடிக்கை வியூகம் வகுத்தல், சரக்கு கையாளுகை மற்றும் ஏற்றுதல், ஆகாய தரைமற்றும் ஆகாயவழி இறக்கம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அமெரிக்க வான்படைக்குரிய, மிசிசிப்பி கீஸ்லர் வான்படைத்தளத்தின் 815வது ஆகாயவழி படையணியின் சி-130து ஹர்குயுலிஸ் விமானம் ஒன்றும், அர்கன்சஸ் லிட்டில் றொக் விமானப்படைத்தளத்தின் 327வது ஆகாயவழிப் படையணியின் சி-130து விமானம் ஒன்றும், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய விமானங்களும் பறப்புப் பயிற்சிக்கான பாகத்தில் பங்குகொண்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg