Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மலையகத்தில் பலம் மிக்க புதிய அமைப்பு உருவாக்கம்!

In இலங்கை
Updated: 09:45 GMT, Sep 19, 2017 | Published: 06:43 GMT, Sep 18, 2017 |
0 Comments
1058
icon_com
This post was written by : Anojkiyan

மலையகத்தில் ஏற்றத் தாழ்வுகள் முதலானவற்றை அகற்றி, சமூகத்தில் பலம் மிக்க அமைப்பொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்தில், ‘திகா மன்றம்’ எனும் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஒரு புதிய மாற்றத்துக்கான ஆரம்பம்’ என்ற தொனிப்பொருளில் ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த அமைப்புக்கான அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான ஜீ. நகுலேஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ஹரின் பெர்னான்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg