Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒட்டு மொத்த நுவரெலியா மாவட்டத்தை இளைஞர்கள் ஆட்சி செய்வார்கள்: அமைச்சர் திகா

In இலங்கை
Updated: 08:23 GMT, Sep 18, 2017 | Published: 08:22 GMT, Sep 18, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Anojkiyan
aan

அடுத்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் ஒட்டு மொத்த பிரதேச சபை, நகர சபைகளை இளைஞர்கள் ஆட்சி செய்வார்கள் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மலையகத்தை மாற்றம் செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை குறித்த இரண்டு வருட காலப்பகுதியில் செய்து வருகின்றோம். காலம் காலமாக மலையக மக்களை லயன் வாழ்க்கையில் வைத்து குளிர் காயந்தவர்களை இன்று ஓரம் கட்டியுள்ளோம்.

எதிர்கால மலையகம் இளைஞர் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றது. கடந்த தேர்தல் காலத்தில் மது இல்லாமல் சேவை செய்ய இளைஞர்கள் முன் வந்தனர். ஏனையவர்கள் மது அல்லது சாராயம் வழங்கி வாக்குகளை பெற்றனர். ஆனால் ஒட்டு மொத்த மலையக மக்களில் இலட்சக்கணக்கானோர் எனக்கே வாக்களித்தனர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg