Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிக் பொஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா

In சினிமா
Published: 09:04 GMT, Sep 18, 2017 |
0 Comments
3372
This post was written by : Surenth
Oviya

பிக் பொஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள பிக் பொஸ் நிகழ்ச்சியின் நூறாவது நாள் மற்றும் இறுதி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பொஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, தனக்கென தனியான ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் ஓவியா. இதன்படி, ஓவியா ஆர்மி, ஓவியே நேவி என சமூகவலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் குழுக்கள் ஆரம்பித்து அவரை கொண்டாடினர்.

இந்த நிலையில், ஓவியா பிக் பொஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மீண்டும் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. ஆனால், அவர் மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஓவியா பிக்பாஸ் நிகழ்சியின் இறுதி நாளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் 30ஆம் திகதி பிக் பொஸ் நிகழ்ச்சியின் நூறாவது நாள் மற்றும் இறுதி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg