Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா. ஆணையாளரை எதிர்த்தவருக்கு பிடியாணை!

In இலங்கை
Updated: 09:00 GMT, Sep 18, 2017 | Published: 08:53 GMT, Sep 18, 2017 |
0 Comments
1184
This post was written by : Varshini

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது விஜயத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்கவை கைதுசெய்யுமாறு, பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் முன்னிலையாக தவறியதன் காரணமாகவே அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவானால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது இலங்கை விஜயத்தை கண்டித்து, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் விமல் வீரவன்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg