Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கியூபாவில் அமெரிக்கத் தூதரகத்தை மூட நடவடிக்கை

In உலகம்
Updated: 08:57 GMT, Sep 18, 2017 | Published: 08:57 GMT, Sep 18, 2017 |
0 Comments
1195
This post was written by : Suganthini

கியூபாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூடுவது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகின்றது.

ஹாவானாவில் அமைந்துள்ள இந்தத் தூதரகத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் மத்தியில் நோய் பரவி வருகின்றது.

இதனை அடுத்து, இந்தத் தூதரகத்தை மூடுவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தூதரகத்தில் பணியாற்றி வருகின்ற ஊழியர்களில், சுமார் 20 பேர் சுகவீனமடைந்துள்ளனர். இவர்கள் மூச்சுத்திணறல், தலைச்சுற்று, குமட்டல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஒருவகையான கிருமி மூலம் ஊழியர்களின் உடல் நலத்தை பாதிக்க பரப்பப்பட்டு வருவதாக அமெரிக்கா சந்தேகிக்கின்றது.

ஆனால், இதை கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ரோ மறுத்துள்ளார். இத்தகைய நோய் தாக்குதலில் கியூபா ஈடுபடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவுக்கும் அதன் அயல் நாடான கியூபாவுக்கும் இடையில் பல வருடங்களாக பகைமை காணப்பட்டதால், அங்கு தூதரக உறவு துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கியூபாவுடனான அமெரிக்காவின் உறவை புதுப்பித்தார். அதைத் தொடர்ந்து, கியூபாவின் தலைநகரான ஹாவானாவில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg