Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சட்டசபை உறுப்பினர்களின் தகுதி நீக்கம் கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின்

In இந்தியா
Published: 10:25 GMT, Sep 18, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Kemasiya
mk_stalin

18 சட்டசபை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தமை கண்டனத்திற்குரியது,  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மாறாக சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட் கிழமை) டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த 18 சட்டசபை உறுப்பினர்கள், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஊடகவிலாளர்கள் சந்திப்பின் பொழுது ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதல்வர் மற்றும் சபாநாயகர் கூட்டிணைந்து, ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளனர். குறுக்கு வழியில் வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கும் ஈ.பி.எஸ் அரசு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈ.பி.எஸ் அரசை காப்பாற்ற குறுக்கு வழியில் சென்ற சபாநாயகரும், பதவிக்குரிய மாண்பை கெடுத்து விட்டார். பேரவையை சந்தித்து வெற்றிபெற முடியாத நிலையை தகுதி நீக்க நடிவடிக்கை எடுத்துக்காட்டுகின்றது.  தமிழகத்தில் இடம்பெறும் அசாதாரண நெருக்கடிக்கு ஆளுநர் பொறுப்பெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg