Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து கனேடிய அமைச்சர் கவலை

In கனடா
Updated: 10:40 GMT, Sep 18, 2017 | Published: 10:40 GMT, Sep 18, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Risha
ro

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து தமது அரசாங்கம் கவலை கொள்வதாகவும், இந்நிலையில் அவர்களின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்வரும் வாரம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுக் கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பில் அவர்கள் மேற்கொள்ளவுள்ள திட்டம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் விரிவான விளக்கமெதனையும் அளிக்கவில்லை.

அத்துடன், மியன்மார் நெருக்கடி ஆராய்ந்துவரும் ஆணையத்தின் தலைவரும், ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகமுமான கொஃபி அனானுடன், இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg