Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

In உலகம்
Published: 10:45 GMT, Sep 18, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Suganthini
un

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கான கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், நியூயோர்க் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஐ.நா பொதுச் சபையின் 72ஆவது அமர்வு, நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் பன்னாட்டுத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் நிகழ்ச்சிநிரலில் உள்வாங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதல் தடவையாக உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg