Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஐரோப்பிய கன்சர்வேடிவ் கண்டனம்

In ஐரோப்பா
Updated: 11:50 GMT, Sep 18, 2017 | Published: 11:49 GMT, Sep 18, 2017 |
0 Comments
1349
This post was written by : Risha
rohingya-migrant

மியன்மாரில் ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து, ஐரோப்பிய கன்சர்வேடிவ் மற்றும் சீர்த்திருத்த குழுக்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஆதரவை கோரியுள்ளன.

இதேவேளை, மியன்மாரில் இராணுவத்தினரும், பாதுகாப்பு படையினரும் மேற்கொண்டுவரும் வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறும், அப்பகுதியில் மனிதாபிமான உதவிகளை உடனடியாக அனுமதிக்குமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சில தனிநபர்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளின் பிரதிபலனாக, முழு ரோஹிங்கியா சமூகத்திற்கும் எதிராக மியன்மாரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக ரோஹிங்கியா சமூகத்தினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் காரணமாக சுமார் 4 இலட்சம் மக்கள் மியன்மாரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg