Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேம்பாலங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை!

In இலங்கை
Updated: 12:10 GMT, Sep 18, 2017 | Published: 12:10 GMT, Sep 18, 2017 |
0 Comments
1247
This post was written by : Ravivarman

கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேம்பாலங்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிருலப்பனை, கொம்பனிவீதி, உள்ளிட்ட 18 இடங்களில் இந்த மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக அவர் இன்று (திங்கட்கிழமை)  குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கனேமுல்ல மற்றும் பொல்ஹாவல ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்து வருகின்றன.

இதேபோன்று ராஜகிரியவில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகளும் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg