Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐப்பானில் தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் – பிரதமர்

In உலகம்
Updated: 12:44 GMT, Sep 18, 2017 | Published: 12:44 GMT, Sep 18, 2017 |
0 Comments
1270
This post was written by : Suganthini

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு தான் நாடு திரும்பிய பின்னர், ஜப்பானில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச் சபைக் கூட்டம், நியூயோர்க்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கு பரிமாற்றம் எனும் தலைப்பில் நாளை மறுதினம் (புதன்கிழமை) ஜப்பான் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை தான் நாடு திரும்பவுள்ளதாகவும் இதன் பின்னர், ஜப்பானில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில்  தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நியூயோர்க் நோக்கிப் புறப்படுவதற்கு முன்னர், இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

ஜப்பானில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பிரதமர் ஷின்சோ அபே எதிர்பார்த்துள்ளார்.

மேலும், இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயையும் ஜப்பான் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg