Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மடு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

In இலங்கை
Published: 15:58 GMT, Sep 18, 2017 |
0 Comments
1371
icon_com
This post was written by : Ravivarman

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களும், அப்பிரதேச மக்களும் இன்று (திங்கட்கிழமை) காலை மடு பிரதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மடு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரியே மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மடு இரண்டாம் கட்டை பகுதியில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் சுமார் 150 மாணவர்கள் உள்ள போதும், உரிய நேரத்திற்கு மாணவர்கள் பாடசாலைக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு உரிய முறையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு கோரி, மடு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MADHU (8) MADHU (7) MADHU (6) MADHU (2) MADHU (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg