Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புத்தளம் மாவட்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளருக்கு விளக்கமறியல்!

In இலங்கை
Published: 17:00 GMT, Sep 18, 2017 |
0 Comments
1249
icon_com
This post was written by : Ravivarman
unnamed

புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் தென்னை அபிவிருத்தி பிரதியமைச்சருமான விக்டர் அன்டனி பெரேராவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை நியூசிலாந்து நாட்டுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி அவரிடம் இருந்து பெற்ற மூன்று இலட்சம் ரூபாவை திருப்பிச் செலுத்தவில்லை என்றக் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதற்கமைய செய்யப்பட்ட முறைப்பாட்டின் பின்னர் புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விக்டன் அன்டனி பெரேரா இன்று (திங்கட்கிழமை) சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரணை செய்த சிலாபம் நீதிபதி ஹேஷான் த மெல்லினால் பிணை பெறுவதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததினால் முன்னாள் அமைச்சர் விக்டர் அன்டனி பெரேராவை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg