Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் ஏற்படப்போகும் மாற்றம்!

In விளையாட்டு
Updated: 04:28 GMT, Sep 19, 2017 | Published: 04:22 GMT, Sep 19, 2017 |
0 Comments
4041
icon_com
This post was written by : Vithushagan
download

இந்தியா – அவுஸ்திரேலியா இடையே தற்போது நடைபெறும் தொடர்தான், ஐந்து போட்டிகள் கொண்ட கடைசி தொடராக இருக்கும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

ஐ.சி.சி தற்போது பல மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. இதில் முக்கியமான ஒன்று 13 அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் லீக். இந்த லீக்கை நடத்துவதற்கு ஐ.சி.சி. அதிக முயற்சி எடுத்து வருகிறது.

வருங்காலத்தில் எந்த நாடும் மூன்று போட்டிகளுக்கு மேல் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. ரி-ருவன்ரி  போட்டிகள் கூடுதலாக நடத்தப்படலாம் என  சதர்லேண்ட் கூறியுள்ளார்.

மேலும், ஒருநாள் கிரிக்கெட் லீக் நடைமுறைக்கு வந்தால், 13 அணிகளும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை சொந்த மண்ணிலும், தலா ஒருமுறை வெளிநாட்டு மண்ணிலும் விளையாட வேண்டும். இதனால் ஒருநாள் தொடர் வரைமுறைக்கு வர வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg