Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு பதில் கூறுவாரா மைத்திரி?

In இலங்கை
Published: 04:48 GMT, Sep 19, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

இலங்கை விவகாரம் சர்வதேசத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள நிலையில், இலங்கையில் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துரைக்கவுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 72ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்றைய முதல் நாள் அமர்வில் ஐ.நா. செயலாளர் நாயகம், அமெரிக்க ஜனாதிபதி ஆகியோருடன் இலங்கை ஜனாதிபதியின் உரையும் இடம்பெறவுள்ளமை முக்கியமான அம்சமாகும்.

குறிப்பாக ஜெனீவா உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த விடயங்கள் செயற்படுத்தப்படாமை தொடர்பாக, தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் ஜனாதிபதியின் உரை அமையவுள்ளது.

மேலும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள், அரசியல் யாப்பு உருவாக்கம் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய அமர்வில் இலங்கை ஜனாதிபதி உலக நாடுகளின் தலைவர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg