Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணியை காப்பாற்றுமா இங்கிலாந்து!

In விளையாட்டு
Updated: 05:27 GMT, Sep 19, 2017 | Published: 05:27 GMT, Sep 19, 2017 |
0 Comments
3043
This post was written by : Vithushagan
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மென்ச்செஸ்டரில் இடம்பெறவுள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் இலங்கை அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

2019ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டித் தொடருக்கு நேரடியாக தகுதி பெற இலங்கை அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளன.

அதன்படிஇ இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 5க்கு 0 என்ற அடிப்படையிலோ அல்லது 4- 0 என்ற அடிப்படையிலோ கைப்பற்றினால் அந்த வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் பெறும்.

மாறாக மேற்கிந்திய தீவுகள் ஒரு போட்டியில் தோல்வியுற்றாலும்இ இலங்கை அணி 2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணத் தொடருக்கு நேரடியாக தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg