Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கனேடிய பிரதமரை சந்தித்தார் தெரேசா மே

In
Updated: 11:17 GMT, Sep 19, 2017 | Published: 06:10 GMT, Sep 19, 2017 |
0 Comments
1148
icon_com
This post was written by : Suganthini

கனடாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வரவேற்றுள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் நேற்று (திங்கட்கிழமை) ஓட்டோவாவைச் சென்றடைந்துள்ள நிலையில், கனேடியப் பிரதமரால் வரவேற்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரித்தானியப் பிரதமருக்கும் கனேடியப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின்போது, வர்த்தக உறவு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், போயிங் விமான உற்பத்தி நிறுவனம் தொடர்பான விவகாரம் தொடர்பிலும் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, போயிங் நடவடிக்கையை எதிர்ப்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிற்றுக்குப் பின்னர், வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் பிரித்தானியப் பிரதமர் கனடாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

மேலும், ஓட்டாவில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்திலும் பிரித்தானியப் பிரதமர் கலந்துகொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg