Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு தாவுவாரா ஸ்ரீதிவ்யா?

In சினிமா
Published: 07:15 GMT, Sep 19, 2017 |
0 Comments
1386
icon_com
This post was written by : Varothayan
Sri-Divya_24714_4

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ‘குடும்பப்பாங்காகத்தான் நடிப்பேன்’ என ஹீரோயின்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றார்கள். ஆனால், துரதிஷ்டம் அவர்களும் இறுதியில் வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டத்தொடங்கி விடுவார்கள்.

அண்மைய காலத்தில் இதற்கு ரெஜினா கெசன்ட்ரா நல்ல உதாரணம். அவர் கவர்ச்சிக்குத் தாவிய பின்னர் தற்போது கை நிறையப் படங்களை வைத்திருக்கின்றார்.

ஆனாலும், ரேவதி, ரோஹினி, சாலினி வரிசையில் ஸ்ரீதிவ்யா கொஞ்சம் குடும்பப்பாங்கான வேடங்களிலேயே நடித்து வருகின்றார். கிளாமராக நடிக்க வேண்டும் என்று வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.

சமீபத்தில் அவரது பாணியிலேயே வந்த வேடங்களை ஏற்று நடித்த காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்திருக்கிறார்.

அதிர்ஷ்டம் இருந்தால் திரையுலகில் எப்படி நடித்தாலும் உச்சத்துக்கு சென்றுவிடலாம். கொள்கையுடன் நடிக்கும் சிலர் அதிர்ஷ்டம் கைகொடுக்காமல் சிக்கிக்கொள்கின்றனர். அப்படித்தான் ஸ்ரீதிவ்யாவின் நிலைமையும் உள்ளது.

அதர்வா ஜோடியாக ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் தற்போது திவ்யா நடிக்கிறார். இதைத் தவிர வேறுபடம் எதுவும் அவருக்கு கைவசம் இல்லை. இனியும் குடும்பப்பாங்காகத்தான் நடிப்பேன் என்று கொள்கையை கடைப்பிடிப்பதா? அல்லது ரெஜினா போல் கிளாமருக்கும் துணிந்து வாய்ப்புகளை அள்ளுவதா? என்ற ஊசலாட்டத்தில் இருக்கிறாராம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg