Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கிழக்கு மாகாணம் மூவின மக்களுக்கும் சொந்தம்: ஹிஸ்புல்லாஹ்

In இலங்கை
Published: 07:43 GMT, Sep 19, 2017 |
0 Comments
1327
icon_com
This post was written by : Vithushagan
unnamed-33-720x450

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களுக்கும் சம உரிமை  உள்ளது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது, மூவின மக்களுக்கும் சம உரிமை கிழக்கில் உள்ளது. ஆரம்பத்தில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதல்வராக இருந்தார்.

இப்பொழுது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முதல்வராக உள்ளார்.

எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திலிருந்து ஒருவர் முதல்வராக வரமுடியும். இவ்வாறு மூன்று சமூகத்தினரும் ஒற்றுமையாக சம உரிமைகளைப் பங்கிட்டுக் கொள்வதற்கு தயாராக கிழக்கு மாகாணம் உள்ளது.

நாட்டில் உள்ள 9 மாகாணங்களிலும் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சராகவோ, முதல்வராகவோ வர முடியும்.

மூன்று இனமும் ஒற்றுமையாக செயற்படக்கூடிய வகையில் கிழக்கு மாகாணம் தனித்து சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளோம். வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தெளிவான நிலைப்பாடு இல்லாமல் இருப்பதையிட்டு மிகவும் கவலையடைகின்றோம்.

எனினும், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதுவரை தெளிவான முடிவினையோ – நிலைப்பாட்டினையோ அறிவிக்கவில்லை. நாங்கள் தமிழ் தலைமைகளுடன் பேசும் போது வடக்கு கிழக்கு இணைப்புக்கு  முஸ்லிம் காங்கிரஸ் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று கூறுகின்றனர்.

வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியமையாலேயே  முஸ்லிம் காங்கிரஸ்க்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் மு.கா. தலைமைத்துவம் இது தொடர்பில் விளக்கமளிக்கவில்லை. இது ஆபத்தான நிலைப்பாடாகும்.

ஆகவே,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைமைத்துவம் அவ்வாறான கருத்துக்களை புறக்கணித்து ‘வடக்கு கிழக்கு இணைய இடமளிக்க மாட்டோம்’ என தெளிவான கருத்தை முன்வைக்க வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg