Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆயுத உற்பத்தியாளர்கள் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளனர் – தொண்டு நிறுவனம்

In
Published: 08:14 GMT, Sep 19, 2017 |
0 Comments
1087
icon_com
This post was written by : Suganthini
weapon

சவூதி அரேபியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றைத் தொடர்ந்து, பிரித்தானிய ஆயுத உற்பத்தியாளர்கள் அதிகளவான இலாபத்தை ஈட்டியுள்ளனர் என, தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யேமனில் மோதல் ஆரம்பித்தது முதல் இதுவரையான காலப்பகுதியில் 6 பில்லியன் பவுண்ட் இலாபத்தை பிரித்தானிய ஆயுத உற்பத்தியாளர்கள் ஈட்டியுள்ளனர் எனவும் இதன் மூலம் பிரித்தானியாவிலுள்ள ஆயுத உற்பத்தியாளர்களுக்கு அதிகளவான இலாபம் கிடைத்துள்ளது எனவும் அந்த நிறுவனம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறியுள்ளது.

மேலும், பிரித்தானியாவிலுள்ள இரண்டு ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு, கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் 600 மில்லியன் பவுண்ட் நிதி இலாபமாகக் கிடைத்துள்ளன எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இவ்வாறிருக்க, பிரித்தானியாவில் பாரிய ஆயுத வர்த்தகக் கண்காட்சியொன்று கடந்த வாரம் நடத்தப்பட்டிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg