Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரான்ஸில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு

In ஐரோப்பா
Published: 09:16 GMT, Sep 19, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : Suganthini
france

பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தத்தை செயற்படுத்துவதற்கான திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழிற்சங்க நடவடிக்கைக்கு பிரான்ஸிலுள்ள தொழிலாளர் ஒன்றியங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தத் திட்டம் தொடர்பான முன்மொழிவொன்றை வைத்திருந்தார். இதற்கு பிரான்ஸிலுள்ள தொழிலாளர் ஒன்றியங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், 10 நாட்களைக் கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் அழைப்பு விடுப்பதாக பிரான்ஸிலுள்ள தொழிலாளர் ஒன்றியங்கள் கூறியுள்ளன.

எதிர்வரும் 22ஆம் திகதி தொழிலாளர் சீர்திருத்தங்களை அமுல்படுத்தவுள்ளதாக நேற்று (திங்கட்கிழமை) பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து, தொழிற்சங்க நடவடிக்கைக்கு தொழிலாளர் ஒன்றியங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg