Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒலிம்பிக் போட்டி உரிமத்தை வென்ற லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு தோமஸ் பாக் பாராட்டு

In விளையாட்டு
Updated: 09:45 GMT, Sep 19, 2017 | Published: 09:45 GMT, Sep 19, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Elakkiya
tho

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை வென்றுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சர்வதேச ஒலிம்பிக் சபைத் தலைவர் தோமஸ் பாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டியுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தோமஸ் பாக் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பன்முகத்தன்மைக்காக பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பிக் சபைக் கூட்டத்தில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பரிஸ் நகரும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரும் தெரிவு செய்யப்பட்டது.

இதன்படி பரிஸ் இரண்டாவது தடவையாகவும் லொஸ் ஏஞ்சல்ஸ் மூன்றாவது தடவையாகவும் ஒலிம்பிக் போட்டி உரிமத்தை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg