Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்றுக்குப் பின் 10 ஆயிரம் நிதி சார் வேலைகளை இழக்க நேரிடும்: ஆய்வில் தகவல்

In
Updated: 10:01 GMT, Sep 19, 2017 | Published: 10:01 GMT, Sep 19, 2017 |
0 Comments
1199
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையை பிரித்தானியா நிராகரித்தால், அடுத்த சில வருடங்களில் சுமார் 10 ஆயிரம் நிதித்துறை சார்ந்த வேலைகளை பிரித்தானியா இழக்க நேரிடும்.

அல்லாவிடின், நிதித்துறை சார்;ந்த வேலைகள் வெளிநாடுகளுக்குச் செல்லும் என்று ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிதித்துறை சார்ந்த புதிய நடவடிக்கைகளுக்கு ஜேர்மனின் பிராங்புரூட் பலரின் விருப்பமாகவுள்ளது. இதற்கு அடுத்த படியாக பிரான்ஸில் பரிஸ் உள்ளது எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நிலையில், தங்களது வர்த்தக நடவடிக்கைகளை மறுசீரமைக்க வேண்டி ஏற்படும்.

அத்துடன், தொழிலாளர்களையும் நகர்த்த வேண்டி ஏற்படும் எனவும் சில நிறுவனங்கள்; தெரிவித்துள்ளன.

இன்னும் சில நிறுவனங்கள், பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளன. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் தாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் சில நிறுவனங்கள் கூறியுள்ளன என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg