Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தென் ஆபிரிக்க அணியை முதலிடத்திற்கு கொண்டுவரமுடியும்: புதிய பயிற்சியாளர் உறுதி

In கிாிக்கட்
Updated: 11:14 GMT, Sep 19, 2017 | Published: 11:14 GMT, Sep 19, 2017 |
0 Comments
1262
icon_com
This post was written by : Elakkiya
ottis

தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியை மீண்டும் உலகத் தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டுவருவதற்கு முயற்சிப்பேன் என அணியின் புதிய பயிற்சியாளர் ஓடிஸ் கிப்சன் உறுதியளித்துள்ளார்.

தென் ஆபிரிக்க அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓடிஸ் கிப்ஸன் முதன்முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்தார். இதன்போதே மேற்படி உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ தென் ஆபிரிக்காவில் திறமையான மற்றும் ஆர்வமுள்ள வீரர்கள் உள்ளனர். அணியை முன்னோக்கி நகர்த்துவதற்கு அத்தகைய திறமையான வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும். எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் சம்பியன் கிண்ணத்தை வெல்வதே எமது இலக்கு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆபிரிக்க அணியின் புதிய பயிற்சியாளர்; கிப்ஸன் இம்மாத இறுதியில் தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பதவியை பொறுப்பேற்கவுள்ளார். அதன்பின்னர் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுடனான தொடர்களிலும் பயிற்சியாளராக பணியாற்றவுள்ளார்.

48 வயதாக முன்னாள் சகலதுறை ஆட்டவீரரான கிப்சன் முன்னதாக 2010 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அதற்கு முன்னர் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg