Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நம்பிக்கையிழந்த உறவுகள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார்

In இலங்கை
Published: 11:03 GMT, Sep 19, 2017 |
0 Comments
1127
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்வையும் பெற்றுத்தராத நிலையில், எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த 208 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்கள், இன்று (செவ்வாய்க்கிழமை) இத் தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.

அதற்கும் அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால், சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா குறிப்பிட்டுள்ளார்.

தமது பிள்ளைகளுக்காக கடந்த ஆறு மாதங்களாக வீதியில் போராடும் தமக்கு, அரசாங்கம் எவ்வித தீர்வையும் பெற்றுத்தரவில்லையென தெரிவித்துள்ள அவர், இப் போராட்டத்திற்கு புலம்பெயர்ந்துள்ள தாயக உறவுகளும் வலுசேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களை கண்டுபிடித்துத் தருமாறு கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமும் 200 நாட்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg