Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அஜீத்தின் சம்மதத்திற்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்!

In சினிமா
Published: 11:49 GMT, Sep 19, 2017 |
0 Comments
1941
icon_com
This post was written by : Vithushagan
06-1462532487-ajith-piocs-600

தல அஜீத் சம்மதித்தால் அடுத்த தினமே படப்பிடிப்புக்கு தாயாராகவுள்ளதாக பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவே வியந்து பார்க்கும் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் அஜீத். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அஜீத் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. தயாரிப்பாளருக்கு போதுமான இலாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், அஜீத்தை வைத்து இயக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார். தற்போது வரை அந்த முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ், ‘ஸ்பைடர்’ படத்தை அடுத்து நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில் ‘‘அஜீத் சார் எப்போ ஓகே சொன்னாலும் அடுத்த நாளே படப்பிடிப்புக்கு தயாராக இருக்கிறேன். அவருக்கான கதையும் தயாராக உள்ளது’’ என்று கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg