Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரம்: சமாதான முயற்சியில் ட்ரம்ப்

In உலகம்
Published: 11:52 GMT, Sep 19, 2017 |
0 Comments
1043
icon_com
This post was written by : Suganthini
isreal

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையில் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு, தமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று (திங்கட்கிழமை) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கும் இடையில் சமாதான முயற்சியை முன்னெடுப்பதானது, சிறந்ததொரு முயற்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சி சிறந்த தீர்வைப் பெற்றுத் தரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சமாதான முயற்சிக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும் விரும்பும் என்று தான் எண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் சமாதான முயற்சியை முன்னெடுக்கும் நடவடிக்கையாக, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸையும் அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg