Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணத்தில் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை!

In இலங்கை
Updated: 12:05 GMT, Sep 19, 2017 | Published: 12:01 GMT, Sep 19, 2017 |
0 Comments
2464
This post was written by : Varshini

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.நாவலர் வீதி அரியாலைப் பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் பத்மபாலசிங்கம் (வயது – 38) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.நாவலர் வீதி அரியாலைப் பகுதியிலுள்ள அவரது விட்டிற்கு நேற்றிரவு சென்ற இனந்தெரியாத நால்வர், அவரை கடத்திச் சென்றுள்ளனர். அதன் பின்னர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அவர், யாழ். மாநகர சபைக்கு அருகிலுள்ள பண்டிக்கோட்டுப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் குற்றுயிராக கிடந்துள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொதுமக்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் கடத்தப்பட்டமைக்கான காரணம் எதுவும் கண்டறியப்படாத நிலையில், யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்தோடு, சந்தேகநபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg