Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

யாழில் சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவம்!

In இலங்கை
Updated: 12:21 GMT, Sep 19, 2017 | Published: 12:14 GMT, Sep 19, 2017 |
0 Comments
1047
icon_com
This post was written by : Vithushagan
IMG_6421

யாழ். மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு கா.பொத. சாதாரண தரப்பரீட்சையில் சகல பாடங்களிலும் அதி திறைமை  சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற 40 மாணவர்களுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபா புலமைப்பரிசில் கொடுப்பனவும், பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளதுடன், யாழ்.மாவட்ட ரீதியாக 32 அரச உத்தியோகத்தர்கள் சிறப்பான பங்களிப்பினைச் செலுத்தியமைக்காகவும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களில், உதி கூடிய மாணவர்களை இலங்கைச் சமூக பாதுகாப்புச் சபையின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்துக் கொண்டமைக்காக கோப்பாய் மற்றும் சாவகச்சேரி, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிரதே செயலாளர்கள, சமூக சேவை உத்தியோத்தர்கள், கிராம சேவையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த நிகழ்வில் இலங்கைச் சமூக பாதுகாப்புச் சபையின் உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

IMG_6276 IMG_6421 IMG_6480 IMG_6504

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg