Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரயில்வே ஊழியர்களும் போராட்டத்தில்!

In இலங்கை
Updated: 12:20 GMT, Sep 19, 2017 | Published: 12:12 GMT, Sep 19, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Surenth
colombo

ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ரயில்வே செயல்பாட்டு மேற்பார்வை உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

வேதனங்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாகவே இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களது, சம்பள முரண்பாடுகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் இருந்து பதில் கிடைக்காமையே இந்தப் பணிப்புறக்கணிப்பிற்கு காரணம் என அந்த கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, நாளை நள்ளிரவு முதல் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தீர்வு கிடைக்கும் வரை பணிப்புரக்கணிப்பு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg