Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் தொடர்பில் மக்கள் விசனம்

In இலங்கை
Updated: 14:17 GMT, Sep 19, 2017 | Published: 14:17 GMT, Sep 19, 2017 |
0 Comments
1340
This post was written by : Surenth

வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்லும் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள், சாரதி அனுமதிப்பத்திரத்தை புதிப்பிக்க செல்பவர்கள் மற்றும் சாரதிகளுக்கான பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக செல்பவர்களே இவ்வாறு தமது கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்திற்கு செல்பவர்கள் மருத்துவ பரிசோதனையை பெற்றுக்கொள்வதற்காக சுமார் ஏழு மணிநேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிறுவனத்துக்கு சேவையை பெறவரும் அரச உத்தியோகத்தர்கள் தனியார் நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள், குடும்பப்பெண்கள் என பலர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Exif_JPEG_420 Exif_JPEG_420 Exif_JPEG_420 Exif_JPEG_420

Exif_JPEG_420 Exif_JPEG_420 Exif_JPEG_420
.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg