Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

AK 47 ஐ வடிவமைத்த கலாஷ்னிக்கோவிற்கு 30 அடிச் சிலை

In உலகம்
Updated: 15:47 GMT, Sep 19, 2017 | Published: 15:09 GMT, Sep 19, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : elayathambi
ed9065ae-9d32-11e7-9b91-f74e36ea6345_1280x720_202151

AK 47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்த லெப்டினட் ஜெனரல்  கலாஷ்னிக்கோவிற்கான 30 அடிச் சிலை ஒன்று மொஸ்கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்தியவாறு நிற்கும் இவரின் சிலை மொஸ்கோ நகரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. கலாஷ்னிக்கோவ் வடிவமைத்த AK 47 ரஷ்யாவின் கலாசார சின்னங்களில் ஒன்றாக மாறி விட்டதாக, இச்சிலையை திறந்து வைத்த ரஷ்ய கலாசார அமைச்சர் விளாடிமிர்  தெரிவித்தார்.

AK-47-type2


இரண்டாம் உலகப் போர் கீதத்துடனான இராணுவ மரியாதைகளுடன் இவரது சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. சிலைத் திறப்பு விழாவின் போது எதிர்ப்புக்களும் கிளம்பின. `ஆயுதங்களை உருவாக்கியவர் மரணங்களை உருவாக்கியவரே` என்ற சுலோக அட்டையுடன் எதிர்ப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

3500

கலாஷ்னிக்கோவ்  1931 இல் செஞ்சேனைப் படைப் பிரிவில் கட்டாயமாக சேர்க்கப்பட்டவராவார். பின்னாளில்  1941 ஆம் ஆண்டு நாசிகளுடனான போரில் இவர் காயமடைந்தார்.  ரஷ்யப் படையினர் செயல் திறனற்ற  சுடுகலன்களைக் கொண்டிருப்பதால்தான்  அவை பின் வாங்குவதாக கருதிய கலாஷ்னிக்கோவ்,  ஆயுத வடிவமைப்பில் ஆர்வம் செலுத்தினார்.

kalashnikov1909aaaa

இவரது தானியங்கி கலாஷினிகோவ் மாதிரி 1947 இல் உருவாக்கப்பட்டது. இதை அடுத்து ஆர் பி கே (ருக்நாய் பியுல்மியாட் கலாஷ்னிக்கோவ் – இலகு எந்திரத்துப்பாக்கி) மற்றும் பி கே (பியுல் மியாட் கலாஷ்நிக்கோவா-கலாஷ்நிக்கோவ் எந்திரத் துப்பாக்கி) வகைத் துப்பாக்கிகளையும் வடிவமைத்து பெரும் புகழை ஈட்டினார்.

விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த கலாஷ்னிக்கோவ், தனது 94 ஆவது வயதில் 2013 ஆம் ஆண்டு மறைந்தார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg