Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 16:25 GMT, Sep 19, 2017 |
0 Comments
1967
icon_com
This post was written by : Sivaguru Siva
TELEMMGLPICT000141058366_2_trans_NvBQzQNjv4BqZHrTyqqLjLkPKjc3TsrXSSooe0IxaCyVBdsVei4rh_Q

ஐ.நாவின் 72வது பொதுச்சபை அமர்வில் இன்று உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  கடும்போக்குடன் நடந்துகொள்ளும் வடகொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வட கொரியத்தலைவர் கிம் ஜொங்  உன்  இனை ரொக்கற் மான் அல்லது உந்துகணை மனிதன் என சீற்றத்துடன் தெரிவித்த ட்ரம்ப் வடகொரியாவை முழுமையாக அழிப்பதற்கு அமெரிக்கா தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கிம் ஜொங் உன் தற்கொலைக்கு ஒப்பான ஒரு செயற்திட்டத்தில் இருப்பதாகவும் ட்ரம்ப் எச்சரித்தார்.

_97868127_64bf0e1c-04bb-4f57-82e2-efda4b3fecd2

கரீபியப் பிராந்திய நாடுகளை  மரியா புயல் மிகமோசமாக தாக்கிவருகிறது. ஏற்கனவே பிரான்சின் ஆட்சியில் உள்ள குவாடலூப் தீவைத்தாக்கி கடும் அழிவுகளை ஏற்படுத்திய புயல் அதன் பின்னர் டொமினிக்கா தீவைத்தாக்கியது. இப்போது புயல் வேர்ஜின் தீவுகள் மற்றும் போர்த்தோறிக்காவை  நோக்கி நகர்கின்றது.

இர்மா புயல் போலவே மரியா புயலும் தற்போது அதியுச்ச ஐந்தாம் நிலைத்தீவிரத்துடன் நகர்ந்து வருகின்றது.

_97866965_041819742-1

ஏற்கனவே இர்மா கடந்து சென்ற அதே பாதையில்தான் ஏறக்குறைய மரியாவும் நகர்வதால் ஏற்கனவே இர்மா புயலால் பாதிக்கபட்ட நாடுகள் மீண்டும் கடும் பாதிப்புக்களை சந்தித்துள்ளன.

உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் பிரித்தானிய வேர்ஜின் தீவில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

_97868376_southbeds_02

சந்தேகத்துக்கு இடமான பொருள் ஒன்று காணப்பட்டதையடுத்து பிரித்தானியாவின் எம்-1 அதிவேக நெடுஞ்சாலை இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது

இந்த நிலையில் மேற்படி பொதியில் வெடிபொருள் எதுவும் இல்லையென காவற்துறையினர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் சந்தேகத்துக்கு இடமான இந்தப்பையில் மஞ்சள் நிறத்தில் திரவத்தன்மையுடைய பொருள் காணப்பட்டதால் அதுகுறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் காவற்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்-1 அதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டதால் கடந்த 6  மணிநேரமாக வாகனச்சாரதிகள் வீதியில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

prabhakaran-mgr-300x267

தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கட்டிப்பிடித்து  அழுததாக மதிமுக பொதுச்செயலர் வைகோ சுவிஸில் தெரிவித்துள்ளார்.

இந்தோ- சிறிலங்கா ஒப்பந்தம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் தன்னிடம் விரிவாக சொல்லாததால் அது குறித்து தனக்கு அதிகமாக எதுவுமே தெரியாதென்ற குற்ற உணர்வுடன் எம்.ஜி.ஆர் அழுததாக குறிப்பிட்ட வைகோ பிரபாகரன் தனது கழுத்தில் கட்டிவிட்ட சயனை குப்பி இன்னமும் தன்னிடம் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா மனித உரிமைப்பேரவைக் கூட்டத்தொடரை முன்னிட்டு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்த பேரணியின் இறுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோது இதனைக் குறிப்பிட்ட வைகோ தான் நெஞ்சால் பூசிக்கின்ற தலைவர் பிரபாகரன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

jain-couple-sumit-rathore-anamika-rathore_650x400_51505586262

இந்தியாவில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளவயது கோடீஸ்வரத் தம்பதியொன்று தமது மூன்று வயது குழந்தையையும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தமது சொத்துக்களையும் விட்டுவிட்டு எதிர்வரும் சனியன்று முழுமையாக  துறவறம் போகும் செய்தி சமுக வலைத்தளங்கள் உட்பட ஊடகங்களில் முக்கியமாக உலாவருகின்றது

நிமுச்பகுதியில் 1.25 லட்சம் சதுர அடி கொண்ட மிகப்பெரிய  வணிக அங்காடிக்கு சொந்தக்காரர்களான இந்ததம்பதியின் துறவற முடிவைமாற்றுவதற்கு உறவினர்கள் கடுமையாக முயற்சித்தபோதும் அது தோல்வியில் முடிந்தது.

35 வயதுடைய கணவர் ராடௌர் தனது 34 வயது மனைவி அனாமிகாவுடன் வாழ்;ந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடித்ததாகவும் இறுதியில் குடும்ப வாழ்க்கையை துறக்க முடிவுசெய்தாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ராடௌர்  லண்டனில் கல்விகற்றுவிட்டு அங்கேயே பணிபுரிந்தபின்னர் குடும்ப தொழிலை பார்த்துக் கொள்வதற்காக குடும்பம் அழைத்தால இந்தியா திரும்பியவர்  அவரது துணைவி அனாமிகா ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெடில் பணிபுரிந்த ஒரு பொறியியல் பட்டதாரியாவார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg