Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு: இன்று தீர்ப்பு திகதி அறிவிப்பு

In இந்தியா
Published: 04:27 GMT, Sep 20, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Risha
2G

தமிழக அரசியல் களம் ஏற்கனவே மிகவும் பரபரப்பாக உள்ள இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் தீர்ப்பு எப்போது என்ற விவரம் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா உள்ளிட்ட 14 பேர் மீது மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ) வழக்கு பதிவு செய்துள்ளது.

டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆறாண்டுகளாக இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு திகதி ஓகஸ்ட் 25ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் முழு ஆவணங்களும் முழுமையாக தயாராகாததாலேயே வழக்கின் தீர்ப்பு திகதி ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று தீர்ப்பு திகதி அறிவிக்கப்படவுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு இடம்பெற்றமையால் அரசாங்கத்திற்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg