Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியாவுக்கு எதிரான ட்ரம்ப்பின் உரைக்கு ஜப்பான் வரவேற்பு

In உலகம்
Published: 04:32 GMT, Sep 20, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Suganthini

வடகொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றியமைக்கு ஜப்பான் வரவேற்புத் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் முதல் தடவையாக கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வடகொரியா மீதான அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கைக்கும் நிலைப்பாட்டுக்கும் தாம் மிகுந்த மதிப்பளிப்பதாக ஜப்பான் அமைச்சரவையின் பிரதம செயலாளர் யோஷிஹைத் சூகா (Yoshihide Suga)  தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடகொரியா தனது அணுவாயுதம் மற்றும் ஏவுகணை விவகாரம் தொடர்பில் பின்வாங்காவிடின், வடகொரியா முற்றாக அழிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி இந்தக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg