Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஜெயலலிதா பொம்மைகள்

In இந்தியா
Updated: 05:37 GMT, Sep 20, 2017 | Published: 05:37 GMT, Sep 20, 2017 |
0 Comments
1242
This post was written by : Risha

நவராத்திரி பண்டிகையின் போது வைக்கப்படும் கொலுவில் வைப்பதற்கென இவ்வருடம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ பொம்மைகள் தயாhரிக்கப்பட்டு விற்பனையில் கொடிக்கட்டி பறக்கின்றன.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கின் குற்றவாளியான ஜெயலலிதாவை பொம்மையாக வைத்து வணங்குவதா என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

நவராத்திரி விழாவின்போது, தேசத் தலைர்கள், தெய்வங்கள், மனிதர்கள், விலங்குகள், கோயில்கள் போன்ற கொலு பொம்மைகளை வைத்து அழகுபடுத்துவது வழக்கம்.

அந்தவகையில், கடந்த ஆண்டு அப்துல்கலாம் பொம்மை, பாகுபலி பொம்மை என்பன வெளிவந்திருந்தன. இந்நிலையில், இவ்வாண்டு ஜெயலலிதாவின் உருவ பொம்மை வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியான பாகுபலி பொம்மைகளை கொலுவில் வைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இம்முறை ஜெயலலிதாவின் உருவ பொம்மைகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg