Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சீரற்ற காலநிலையால் மும்பை ஸ்தம்பிதம்

In இந்தியா
Published: 06:22 GMT, Sep 20, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Risha

இந்தியாவின் நிதி நகரமான மும்பையில் மீண்டும் பெய்துவரும் அடைமழை காரணமாக, நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமானநிலையத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் என்பவற்றை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் அடைமழை பெய்துவருகிறது. இந்நிலையில், மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரித்துள்ளது.

அடைமழை காரணமாக தரை மற்றும் வான்வழி போக்குவரத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில்தண்டவாளங்களில் நீர் நிரம்பியுள்ளதால்   ரயில்போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளதாக  ரயில்வே  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மும்பை விமானநிலையத்தின் பிரதான ஓடுபாதை மூடப்பட்டுள்ள நிலையில் ஆறு சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு திசை திருப்பப்பட்டுள்ளன.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக விமானச்சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் மிகப்பெரிய விமானச்சேவை நிறுவனமான இன்டிகோ மற்றும் ஜெட் எயர்வேஸ், விஸ்தாரா என்பன அறிவித்துள்ளன.

மும்பையில் அசாதாரண காலிநிலை நீடிக்கின்ற நிலையில், இன்றைய தினம் பாடசாலைகள், கல்லூரிகள் என்பனவும் மூடப்பட்டுள்ளன.
கடந்த 2005ஆம் ஆண்டு பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 500 பேர்வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg