Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

டோனியின் எழுச்சிக்கு விராட் கோஹ்லிதான் முழுக்காரணம்: பிரபல வீரர் கருத்து

In கிாிக்கட்
Published: 06:12 GMT, Sep 20, 2017 |
0 Comments
2001
icon_com
This post was written by : Anojkiyan
dc-Cover-he1luqhla4l3482u9b7jf6pcu2-20170123204850.Medi

டோனியின் எழுச்சிக்கு அணித்தலைவர் விராட் கோஹ்லியே முழுக்காரணம் என அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அனைத்து போட்டிகளின் அணித்தலைமை பதவியில் இருந்து விலகியதன் பின்னர் கடுமையாக விமர்சிக்கப்பட்ட டோனி, சமீபகாலமான சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருவதுடன் விக்கெட் காப்பாளர் பணியினையும் செவ்வனே செய்துவருகிறார்.

அத்தோடு இறுதியாக விளையாடிய போட்டிகளில் அதிக அரைச்சதத்தையும் பூர்த்தி செய்தார். இந்நிலையில், டோனியின் இந்த மாற்றம் குறித்து கங்குலி கூறுகையில்,

”வீரர்கள் நீண்ட காலம் விளையாடும்போது அவர்களுக்கு எப்படி ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்பது தெரிந்திருக்கும். 9 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் டோனி குவித்துள்ளார். தனது ஓய்வு காலத்திற்குள் இன்னும் ஓட்டங்கள் குவிப்பார்.

டோனி ஓட்டங்கள் குவிப்பதற்கு அணித்தலைவனின் உறுதிதான் காரணம். இதற்காக விராட் கோஹ்லிக்கு நன்றி கூறவேண்டும். ஏனெனில், டோனி மீது விராட் கோஹ்லி அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளார். டோனி எப்படி விளையாட விரும்புகிறாரோ? அந்த வழியில் விளையாட அவருக்கு சுதந்திரம் அளித்துள்ளார்.

வீரர்கள் உருவாவதும், அவர்கள் உடைந்து போவதும், நீங்கள் அவர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை பொறுத்தது. டோனி இன்று என்ன செய்கிறாரோ, அதற்கு முழுக்காரணம் விராட் கோஹ்லிதான்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg