Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மெக்சிக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 216ஆக உயர்வு

In உலகம்
Published: 06:37 GMT, Sep 20, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Suganthini

மெக்சிக்கோவில் ஏற்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 216ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கட்டட இடிபாடுகளில் சிக்கி 30 சிறுவர்கள் உட்பட 38 பேர் காணாமல் போயுள்ளனர்.

மெக்சிக்கோவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின்போது, பாடசாலைக் கட்டடமொன்று இடிந்து விழுந்ததில் 20க்கும் அதிகளவான சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அங்கு தொலைத்தொடர்புச் சேவைகளும் மின்வியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 2 மில்லியன் கணக்கான மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

மெக்சிக்கோ நகரில் மாத்திரம் 44 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என, மெக்சிக்கோ மேயர் மிகுவல் ஏஞ்சல் மன்செரா (Miguel Angel Mancera) தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்தின்போது, எரிவாயு ஆலைகளும் சேதமடைந்திருக்கலாம் எனவும் எனவே, வீதிகளில் நின்றுகொண்டு புகைப்பிடிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு, அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில், மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அனர்த்தம் இடம்பெற்ற இடத்துக்கு மெக்சிக்கோ ஜனாதிபதி பெனா நைட்டோ சென்று பார்வையிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg