Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் சுற்றுலாத் தினம்: சி.வி.

In இலங்கை
Published: 06:51 GMT, Sep 20, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Varshini

இலங்கையின் வடபகுதியின் பாரம்பரிய, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை எடுத்துரைக்கின்ற ஒரு நிகழ்வாக ‘2017 – சுற்றுலாத்தினம்’ அமையுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி உலக சுற்றுலா தினம் யாழில் கொண்டாடப்படவுள்ள நிலையில், அது தொடர்பாக கைதடியில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து முலமைச்சர் விளக்கமளிக்கையில்-

”வடக்கு மாகாணத்தில் எத்தனையோ சுற்றுலா மையங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதன. நயினாதீவு மற்றும் தம்பகோளப்பட்டினம் என்பன கடற்படையினரால் அடையாப்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் அங்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவற்றினை மாற்றியமைப்பதற்காக சுற்றுலா மையங்கள் புனரமைக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பிரதானமாக-

1.வடக்கு மாகாண சுற்றுலாத் துறைக்கான தந்திரோபாய திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. அந்த திட்ட வரைவு என்னால் பரிசீலிக்கப்பட்டு குறுகிய காலத்திற்கு ஏற்புடையதாய் இருந்தாலும், நிலையான ஐந்து வருட அல்லது பத்து வருட முதன்மைத்திட்டம் ஒன்றை தயாரிக்கவுள்ளோம்.

2.சுற்றுலா சார் துண்டுப்பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை, சுற்றுலாத் தினத்தன்று மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

3.போர்க்காலத்தில் வடக்கு மாகாண வரைபடம் உத்தியோகபூர்வமாக கிடைக்காமல் இருந்தது. அதனை உத்தியோகபூர்வமாக தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, சுற்றுலா மையங்களை உள்ளடக்கிய வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

4.வடக்கு மாகாண சுற்றுலா வழிகாட்டி நூல்கள் சிலவற்றை தயாரித்து அன்றைய தினம் வெளியிடவுள்ளோம். இவற்றுக்கும் மேலாக சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதன் மூலமாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வடபகுதியை நோக்கி வருவதற்கும், வடபகுதியில் காணப்படும் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

இவற்றிற்கு மேலதிகமாக இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம், விருந்தோம்பல் முகாமைத்துவப் பாடநெறிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் அதேநேரத்தில் எமது மக்களின் கலாசார பிறழ்வுகளுக்கு இடம்கொடுக்காத வகையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட வேண்டும். எமது பாரம்பரியம் மற்றும் கலைகள் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg