Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

டோனி 2023ஆண்டு உலகக்கிண்ண தொடரில் விளையாடுவார்: ஆஸி வீரர் கணிப்பு

In கிாிக்கட்
Updated: 07:34 GMT, Sep 20, 2017 | Published: 07:33 GMT, Sep 20, 2017 |
0 Comments
1471
icon_com
This post was written by : Anojkiyan
dhoni

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறும் உலக்கிண்ண தொடரில் டோனி விளையாடுவார் என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார்.

முன்று வகை கிரிக்கெட்டிலிருந்தும் தனது அணித்தலைமை பதவியிலிருந்து டோனி விலகியதன் பின்னர் அவரது வயது, உடற்தகுதியை காரணம் காட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் என பலதரப்பிலும் விமர்சிக்கப்பட்டது.

ஆனால், தற்போது அவர் தனது துடுப்பாட்டத்தையும், விக்கெட் காப்பாளர் பதவியினையும் மேம்படுத்தி தன் மீதான அனைத்து விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கியுள்ள நிலையில், அவர் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கிண்ண தொடரில் பங்கேற்பது உறுதி என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே சந்தேகத்திற்கிடமின்றி கூறிவிட்டார்.

இந்நிலையில் இதனை அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வீரர் கிளார்க்கும் ஆதரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
“டோனி அபாரமாக விளையாடி வருகிறார். அவர் 2019 உலகக்கிண்ண தொடரில் விளையாடுவாரா என கேட்காதீர்கள். என்னை பொறுத்தவரை அவர் 2023 உலகக்கிண்ண தொடரிலும் விளையாடுவார் என்றே சொல்வேன்” என கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg