Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அற்புதம்மாளின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு?

In இந்தியா
Updated: 07:29 GMT, Sep 20, 2017 | Published: 07:29 GMT, Sep 20, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Risha
Atputh

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் எதிர்வரும் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பரோலை நீடிக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு அற்புதம்மாள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பேரறிவாளன் உடல் உபாதைகளினால் அவதிப்பட்டுவரும் அதேவேளை, அவரது தந்தை மற்றும் சகோதரியும் உடல் ரீதியாக பலவீனமடைந்துள்ளனர்.

இந்த தருணத்தில் மகன் என்ற ரீதியிலும், சகோதரன் என்ற ரீதியிலும் பேரறிவாளன் எம்முடன் இருப்பது பெரும் பலமாகும். எனவே எனது மகனின் பரோலை நீடிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு 26 வருடங்களுக்கு பிறகு ஒருமாத காலம் பரோல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg