Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோர்வேயில் பொலிஸ் அதிகாரிக்கு 21 வருடகால சிறைத்தண்டனை

In ஐரோப்பா
Updated: 07:32 GMT, Sep 20, 2017 | Published: 07:32 GMT, Sep 20, 2017 |
0 Comments
1315
This post was written by : Suganthini

நோர்வேயில் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி அளித்தமை மற்றும் இலஞ்சம் வாங்கியமை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு, 21 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2014ஆம் ஆண்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, இவர் மீது வழக்குத் தாக்கல் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) ஒஸ்லோவின் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டபோது, அவரைக் குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம் மேற்படி தீர்ப்பளித்துள்ளது.

இவர் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி அளித்து இலஞ்சம் வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தனது குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தப் பொலிஸ் உத்தியோகர்த்தர், தனது சட்டத்தரணி மூலமாக மேன்முறையீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சுமார் 14 தொன் கஞ்சாவைக் கடத்துவதற்கு இவர் உதவி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg