Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை நாடாளுமன்றில் அமளி: 20ஆவது திருத்தச் சட்டத்தில் குழப்பம்!

In இலங்கை
Updated: 08:30 GMT, Sep 20, 2017 | Published: 07:59 GMT, Sep 20, 2017 |
0 Comments
1393
This post was written by : Varshini

இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக எழுந்த கடும் வாதப் பிரதிவாதங்களை தொடர்ந்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருத்தங்களுடனான சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்ட நிலையில், அது மாகாண சபைகளின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டதா என ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

அதற்கான அவசியம் கிடையாதென சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டதோடு, குறித்த திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆரம்பித்தார். இதனையடுத்து ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் சபை அமர்வுகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இதேவேளை, இத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும் என்றும், அதுவரை குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சபையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானதென உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த நிலையில், திருத்தங்களுடனான சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg