Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு

In ஐரோப்பா
Published: 08:04 GMT, Sep 20, 2017 |
0 Comments
1241
icon_com
This post was written by : Suganthini
boat

முதலாம் உலக மகா யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஜேர்மனியக் கப்பலொன்று கடலில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 UB-II ரக இந்த நீர்மூழ்கிக் கப்பல், பெல்ஜியத்துக்கு அப்பாலான கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் கப்பலினுள் 23 சடலங்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்தக் கப்பல் கடலில் 30 மீற்றர் ஆழத்தில் மூழ்கியுள்ளது என்பதுடன், இதுவரையில் இந்தக் கப்பல் சேதமடையாமல் சிறந்த முறையில் காணப்படுகின்றது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இந்தக் கப்பல் சூறையாடப்படுவதையோ அல்லது சேதமாக்கப்படுவதையோ தடுத்து, பாதுகாக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg