Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் விபத்துத் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்வு

In இலங்கை
Updated: 10:59 GMT, Sep 20, 2017 | Published: 08:16 GMT, Sep 20, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Arul Jesu
IMG_4448

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளும் விதமாக விபத்துத் தவிர்ப்பு விழிப்புணர்வு  நிகழ்வு தற்போது இடம பெற்று வருவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இதற்கமைய இன்று (புதன்கிழமை) களுதாவளை மகா வித்தியாலயத்திற்கு முன்னால் கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட விபத்துத் தவிர்ப்பு  விழிப்புணர்வு   நிகழ்வில் தத்ரூபமான விபத்து இடம்பெறும் காட்சிகள் அரங்கேற்றப்பட்டன.

விபத்துக்கள் ஏற்படும் போது அதில் பாதிக்கப்படுபவர்கள், காயமடைபவர்கள் உள்ளிட்டோரை வைத்தியசாலையில் எவ்வாறு அனுமதிப்பது என்பது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை  இதன்போது இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வைத்தியசாலையின் அனத்த பாதுகாப்பு பிரிவினர், பொது மக்கள், களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.

IMG_4450 IMG_4451 IMG_4464 IMG_4468 IMG_4470 IMG_4486 IMG_4539 IMG_4557 IMG_4572

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg